Monthly Archives: February 2026

முடிவிலியும் (infinity) முடிவிலா ஆட்டமும்

முடிவிலி (infinity) என்பது கணிதத்திலும் சரி, அரசியலிலும் சரி சில தலைகீழான பண்புகளைக் கொண்டுள்ளன. ஒரு விடுதியில் முடிவில்லா எண்ணிக்கையுள்ள அறைகள் உள்ளன (infinity hotel) என்று எடுத்துக்கொள்வோம். அனைத்து அறைகளும் விருந்தினர்களால் நிரம்பிவிட்டன. இப்பொழுது ஒரு புதிய முடிவிலா தொடர்வண்டி (infinity train) ஊருக்குள் வருகிறது. அதில் முடிவிலா எண்ணிக்கையான பயணிகள் இருக்கின்றனர். இவர்கள் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அறிவிப்பு: நூல் வேலை, புத்தகக்குழு

தற்பொழுது நூலைத் தொகுக்கும் வேலையில் இருப்பதால், இனி அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய பதிவுகள் எழுதுவது கடினம் அண்மையில் ஒருவர் புத்தகக்குழுவைப் பற்றி கேட்டிருந்தார். போதுமான நபர்கள் இல்லாததால், புத்தக்குழுவை தொடரமுடியவில்லை.

Posted in Uncategorized | 2 Comments

முடிவிலா ஆட்டம் – 5

வான் நாயமானின் விதிகள் ஒரு விதையிலிருந்து மரமாக வளர்வதற்குத் தேவையான கட்டமைப்புகளை விளக்குகிறது. இந்த விதிகள் அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும். அப்பலோனியன் தயனிசியன் என்பவை அவ்வுயிரின் தன்மையையும் வடிவத்தையும் தீர்மானிக்கின்றன. இதை இனி விரிவாகப் பார்ப்போம். ஒரு விதையில் உயிரில்லை என்றால், அந்த விதை ஒரு சோடை, அது முளைக்காது. அதுபோல தயனிசியன் என்பது புனிதத்தின், … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அறிவார்ந்த சமூகம்

2020 -இல் எழுதிய கட்டுரை. பதிப்பிக்க மறந்துவிட்டேன். ஒரு சமூகம் அறிவார்ந்த சமூகமாக மாறுவதற்கான முறைகள் எளிதானவை, ஆனால் என்னவோ சமூகங்கள் அவற்றை மறந்துவிட்டு இல்லாத இடம் தேடி அலைகின்றன. முதன் முதலில் அறிவுத்துறையில் மாபெரும் சாதனைகளை பண்டைய கிரேக்கர்கள் படைத்தார்கள். அவர்களைப் பின்பற்றி ரோமாபுரியும் பல சாதனைங்களைப் படைத்தது.அதற்குப்பின் ஏறக்குறைய 1500 வருடங்கள் எதுவும் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

முடிவிலா ஆட்டம் – 4

ஞானப் பாதை: அறிவைத் தேடும் ஒருவனின் பாதை பெரும்பாலும் கீழுவரும் படிகளைக் கொண்டது. இப்பாதை சாக்கரட்டீசிலிருந்து, தேக்கார்டு, இயூம், நீட்சே , ஆடம் சுமித்து, கார்ல் யுங்கு என அனைத்து பெரும் சிந்தனையாளர்களுக்கும் பொருந்தும்: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின். (குறள் -2 ) பொருள்: தூய அறிவு வடிவமான இறைவனின் நன்மை … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

நஞ்சா, அருமருந்தா?

2009 இறுதிப் போரில் நடந்த நிகழ்வுகள் உளவியல் ரீதியாக பெரும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உளவியலை சரியாக நாம் கையாளவில்லை என்றால் அது நஞ்சாக மாறி நம்மை மேலும் அழிவிற்கு உள்ளாக்கும், ஆனால் அதே உளவியலை அருமருந்தாக மாற்றினால் நமக்கு மாபெரும் வளர்ச்சியை அளிக்கும். கார்ல் யுங்கு, ஜோர்டான் பீட்டர்சன் ஆகியோரின் தத்துவங்களை விளக்கி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment