Monthly Archives: January 2026

முடிவிலா ஆட்டம் -3

நகலெடுக்கும் உறுப்புகள் (B) புனிதம் (தகவல்) என்பது நூலில் மட்டும் இருந்தால், அதனால் எந்தப் பயனும் இல்லை. புனிதம் இருக்கவேண்டிய இடம் என்பது மனித மூளை. ஒரு சமூகத்தில் உள்ள அனைவருக்கும் புனிதம் என்பது கற்பிக்கப்படவேண்டும். இதை நகலெடுத்தல் என்கிறோம். இதை எவ்வாறு செயல்படுத்துவது என இனி பார்ப்போம்: நகலெடுத்தல் என்பது அடிப்படையில் பரப்புரை சார்ந்தது. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

முடிவிலா ஆட்டம் – 2

இனி ஒவ்வொரு உறுப்பாக எடுத்து ஆராய்வோம். தகவல்: தமிழ்ச்சமூகத்தின் 2500 ஆண்டுகால வரலாற்றைப் பார்த்தோம். காலப்போக்கில் பலவேறு புனிதங்கள் தோன்றி வெவ்வேறு பண்பாட்டை உருவாக்கி இருக்கின்றன. சில புனிதங்கள் நமக்குள்ளே தோன்றி இருக்கின்றன, சில வெளியில் இருந்து வந்து இணைத்திருக்கின்றன. உதாரணமாக ஆரியப் புனிதம் அவ்வாறுதான் வந்திருக்கிறது. அதன் காரணங்களை நான் ஆராயவில்லை. வெளியில் இருந்து … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

முடிவிலா ஆட்டம் -1

இதுவரை பல்வேறு தத்துவங்களைத் தனித்தனியாகப் பார்த்தோம். இவற்றின் அடிப்படையில் நாம் உத்திகளைக் கட்டமைக்க வேண்டும் என்றால் அவற்றை ஒருங்கிணைத்து ஒரு ஒட்டு மொத்த பெருந்திட்டமாகப் ( Grand Strategy) பார்க்கவேண்டும். அந்த ஒட்டு மொத்த பெருந்திட்டம்தான் முடிவிலா ஆட்டம் ( Infinite game). எந்த ஒரு சமூகமும் நீடித்து பல தலைமுறைகள் தாண்டித் தொடரவேண்டும் என்றால், … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அறம், பொருள், இன்பம்

தமிழ் சான்றோர்கள் மனித வாழ்க்கை நெறியை அறம், பொருள், இன்பம் என மூன்றாகப் பிரித்தார்கள். இவற்றில் அறம் என்பதுதான் முதன்மையானது. அதன் வழியாகவே பொருள் ஈட்டவேண்டும், இன்பமும் அடையவேண்டும். அறப்படி வாழ்வதுதான் இன்பம் என்று வகுத்தார்கள். இதற்கு ஆழமான காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான காரணம் என்பது இந்த வரையறையில் இருந்து விலகினால், அது ஒரு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

சிந்தனையாளர்களின் இன்றைய கடமை

ஒரு சமூகம் எப்பொழுது அழியும் என்பதற்கு இரு முக்கிய காரணங்களை வைக்கிறார் இடாயின்பீ (Toynbee): 1) ஒரு சமூகத்தில் சிந்தனை என்பது சிறிய எண்ணிக்கையுள்ள சிந்தனையாளர்களால் நடப்பது. இவர்களை சிந்தனை சிறுபான்மையினர் ( Creative minority) எனலாம். ஒரு சமூகம் தான் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இந்த சிந்தனை சிறுபான்மையினரை நம்பியே உள்ளது. இவர்கள் சிக்கல்களுக்கு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

வீரப்பயணம்

உலகில் பெரும்பாலும் அனைத்து சமூகங்களிலும் உள்ள ஒரு பொதுவான கதைதான் “வீரப்பயணம்” . இக்கதை ஒரு சமூகத்திற்கு தகவலை மட்டுமல்ல, அர்த்தத்தையும் தலைமுறைகள் தாண்டி கடத்துகின்றன. இக்கததையின் வடிவத்தை விளக்கி, தலைவரின் கதை எவ்வாறு பொருந்துகிறது , அக்கதையிலிருந்து இனி நாம் என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம். ஒரு சமூகம் நெருக்கடி, அவமானம், அச்சம், தோல்வி, … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கிட்டுவும் சீப்பியோவும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமப் பெரரசில் சீப்பியோ (Scipio) என்ற புகழ்பெற்ற படைத்தளபதி இருந்தார். அவர் பயனித்த கப்பல் காற்று சாதகமாக வீசாததால் எதிரிகளின் கரைப்பக்கம் ஒதுங்கியது, உடனே எந்த கலக்கமும் இல்லாமல் தனது வாளை எடுத்து தனது உடலில் பாய்ச்சினார். எதிரிகள் கப்பலில் புகுந்து உங்கள் தளபதி எங்கே என்று கேட்டனர். அதற்கு சீப்பியோ … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

நகலெடுத்தல் – 2

சமூகவியல் என்பது இயற்பியல் போன்றது அல்ல. இயற்பியலில் ஒரு சிலவிதிகளை வைத்து அனைத்தையும் விளக்கிவிடலாம், ஆனால் சமூகவியலில் அதுபோன்று ஒரு தத்துவம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு தத்துவமும் சமூகத்தின் ஒவ்வொரு கோணத்தை காண்பிக்கும், அதனால் பல்வேறு தத்துவங்களின் உதவியுடனே சமூகத்தைப் புரிந்துகொள்ள முடியும். சுபெங்கலரின் தத்துவத்தை இவ்வாறுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். இனி சுபெங்கலரின் தத்துவத்தைக் கொண்டு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

நகலெடுத்தல்-1

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தான் இவ்வுலகில் என்ன செய்வேண்டும் என்பதை சிந்தித்து அதன்படி செயல்படுகிறான் என்று நினைத்தால் அது தவறானது. உண்மையில் என்ன நடக்கிறதென்றால், அவன் மற்றவர்களைப் பார்த்து நகலெடுத்து செயல்படுகிறான். தமிழில் ஒரு பழைய பாட்டு ஞாபகம் வருகிறது. “அடுத்தாத்து அம்பூஜத்தை பார்த்தேளா” என்று அப்பாடல் ஆரம்பிக்கும். அப்பாடலில் பட்டு மாமிக்கு, அடுத்த … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஆட்டக்கோட்பாடுகளும் ஒத்துழைப்பும்

சுயநல மரபணுக்கள் மிகவும் சுயநலமானவை. அதன் வீச்சு குறுகிய சுற்றத்தைத் தாண்டுவதில்லை. ஆனாலும் நாம் நாட்டுக்காகப் போராடி உயிர் துறக்கிறோம், எளியவர்களுக்கு உதவுகிறோம், சிலர் தங்களது உயிர் போனாலும் மற்றவர்கள் உயிரைக் காக்கிறார்கள், இன்னும் சிலர் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் பொதுநலத்துக்காக உழைக்கிறார்கள். இன்றைய நவீன உலகம் மனிதர்களிடையே ஒத்துழைப்பு இல்லாமல் நடக்கவில்லை. நாம் சுயநலம் மிகுந்தவர்கள்தான், … Continue reading

Posted in Uncategorized | Leave a comment