Monthly Archives: December 2025

அறிவுக் காமம்

இன்று ஒரு குறளைக் கேள்விப்பட்டேன். வள்ளுவன் காமத்தில் கிடைக்கும் இன்பமும் நுண்ணிய நூல்களைக் கற்கும்பொழுது இருக்கும் இன்பமும் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு வியக்கிறார்: அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு. ( 1110) இதே கருத்தை பிளேட்டோவும் சிம்போசியம் என்ற நூலில் கூறுகிறார், ஆனால் அவர் கற்றலினால் கிடைக்கும் இன்பம் காமத்து இன்பத்தை … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

புனிதம் – 4

மரபணுக்கள் வழியாக உயிரியல் பரிணாமம் ஏற்படுகிறது, அதுபோல புனிதத்தின் வழியாக பண்பாட்டு பரிணாமம் ஏற்படுகிறது. பரிணாமத் தத்துவம் ( Evolution ) என்பது இரண்டிற்கும் பொதுவானது என்பதால், உயிரியல் பரிணாமத்தில் நமக்குத் தெரிந்த பல்வேறு தத்துவங்களை ஒரு சமூகத்திற்கும் பயன்படுத்தலாம். அதன் மூலம் உலக சமூகத்தையும், நமது சமூகத்த்தின் பலம் பலவீனங்கள் என்ன, பலவீனங்களை எவ்வாறு … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

புனிதம் -3

ஒரு சமூகத்தில் புனிதத்தின் வேலை என்ன என்பதை மேற்கூறிய கருத்துக்களின் ( பார்க்க புனிதம் -1) அடிப்படையில் பின்வருமாறு தொகுக்கலாம்: இப்பொழுது ஒரு முக்கியமான கேள்விக்கு வருவோம். புனிதம் என்பது மனித சமூகங்களுக்கு மட்டும்தானா, இல்லை அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதா? இதற்கான விடை “பொதுவானது” எனபதே ! ஒரு உயிரின் புனிதம் எது என்று காணவேண்டும் … Continue reading

Posted in Uncategorized | 2 Comments

நம்மிடம் இல்லாத தத்துவமா?

என்னிடம் அடிக்கடி தோன்றிய ஒரு கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிட்டது. கேள்வி இதுதான்: பண்டைய தமிழருக்கும் பண்டைய கிரேக்கருக்கும் வணிகத் தொடர்பு இருந்தும், பண்டைய தமிழரின் எழுத்துக்களில் கிரேக்க அறிவுத் தாக்கம் இருப்பது போலத் தெரியவில்லை. கிரேக்கர்களிடம் அக்காலத்திலேயே தத்துவங்களை உரைநடை வடிவில் எழுத ஆரம்பித்துவிட்டார்கள், வரலாற்று நூல்களையும் எழுத ஆரம்பித்து விட்டார்கள். தமிழில் உரைநடை … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

புனிதம்-2

மாவீரர் நாள் : புனிதம் என்பது மனிதன் உள்ளுக்குள் உணர்வது, அது முற்றிலும் உளவியல் சம்பந்தப்பட்டது. ஈழத்திலே நடக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒரு இறை வழிபாட்டுத் தளத்தில் இருக்கும் அதே புனிதத்துடன் கடைபிடிக்கப் பிடிக்கப் படுகிறது. மக்களும் அதே புனித உணர்வுகளுடன் பின்பற்றுகிறார்கள். மாவீரர் நாள் எவ்வாறு அனுசரிக்கப்பட வேண்டுமோ, அப்படியே அச்சுபிசகாமல் ஈழத்தில் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment