Monthly Archives: November 2025

புனிதம் -1

புனிதம் -1 மாவீரர் வாரத்தில் எங்கு பார்த்தாலும் ஒரு வசனம் அடிக்கடி தென்படும். அது “தலைவன் நமது இறை” என்பதுதான். இதை மேலோட்டமாக ஏன் என்று அனைவருக்கும் புரிந்தாலும், இதில் ஆழமான காரணங்கள் உள்ளன. மனித மூளையில் ஏற்படும் சிந்தனைகளை புலப்படும் சிந்தனை, புலப்படாத சிந்தனை என இருவகைகளாகப் பிரிக்கலாம். தலைவன் நமது இறை என்பது … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

கல்வியா செல்வமா வீரமா?

சரசுவதி சபதம் என்ற படம் இந்த கேள்வியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இவை மூன்றும் சமமானவை என்று கதை முடியும். எனக்கு நீண்ட காலமாக இந்த முடிவில் வேறுபாடு இல்லாமல் இருந்தது. ஆனால் நூல்களை தீவிரமாகக் கற்க ஆரம்பித்த பின்னர், தர்க்கங்களின் அடிப்படையில் எனது முடிவு மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை அறிவுதான் முதன்மையானது என்று நினைத்தேன். … Continue reading

Posted in Uncategorized | 2 Comments

அப்பலோனியன்-2

இதுவரை தமிழுலகத்தில் தோன்றிய தத்துவ அறிஞர்களில் தலைசிறந்தவர் யார் என்றால் என்ன கூறுவீர்கள்? பலருக்கு வள்ளுவர் நினைவுக்கு வருவார். முதலில் தத்துவமேதை நீட்சே “சிறந்த தத்துவமேதை யார்” எனக் கூறுவதை பார்ப்போம். பின்பு அதன் அடிப்படையில் இக்கேள்விக்கான விடையைக் காண்போம். உண்மையான தத்துவமேதைகள் என்பவர்கள் மாபெரும் ஆளுமைகளாக, சட்டசிற்பிகளாக இருப்பார்கள். அவர்கள் “இது இப்படித்தான் இருக்கவேண்டும்” … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

அப்பலோனியன்-1

நீட்சே உலகை தயனிசியன் அப்பலோனியன் [6] என இருவகையாகப் பிரித்தார். தயனிசியன் என்பது உணர்வுகளால் ஆனது, பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது. அதிரிலிருந்து பிறக்கும் உணர்வுகள்தான் மனிதனுக்கு விருப்பத்தை அளித்து, உந்தி இயக்கி, அரசியல் முதல் அறிவியல் வரை சாதனைகளைப் படைக்கவைக்கிறது. தமிழினத்தின் தயனிசியன் என்பது பிரபாகரனே என முந்தைய கட்டுரைகளான தயனிசியன், வீரநாயகன், இறவாமை, ஊபர்மேன்சு, தீர்க்கதரிசி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

உண்மையா தீமையா? 

அனைத்து சிந்தனையாளர்களும் அறிவுசீவிகளும் அடிப்படியில்  இரு அடிப்படைக் கருதுகோள்களுக்கு  முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.  1.  தீமையைக் குறைப்பது, நன்மையைப் பெருக்குவது. ( minimizing harm  or maximizing happiness )  2.  உண்மையைப் பெருக்குவது ( maximizing  truth )  இவை இரண்டும் அறத்தின் அடிப்படை. அனைத்து சிந்தனையாளர்களும் இவற்றை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் சிந்தனைகள் எதிரும் புதிருமாக … Continue reading

Posted in Uncategorized | 2 Comments