Category Archives: பகுத்தறிவு

தமிழுணர்வு எங்கிருந்து வருகிறது, அதன் சமூக தாக்கம் என்ன?

வரலாற்றை உற்று நோக்கினால் ஒன்று தெளிவாகத் தெரியும். தமிழ் நூல்களைத்தேடி சேகரித்த உ. வே. சாமிநாதர்,  தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளிலிருந்து  இன்றுவரை தமிழ் பற்றுடன் இயங்கும் பலரை இயக்குவது அவர்களிடமுள்ள தமிழுணர்வுதான் என்பதில் எந்த ஐயமுமில்லை. தமிழ் தழைக்க இதுவரை மாபெரும் உந்து சக்தியாக உணர்வுகளே இருந்து வந்திருக்கிறது,  மாறாக சுயநலம் அல்ல. … Continue reading

Posted in அரசியல், அறிவு, சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு, Uncategorized | 3 Comments

நாம் அறிவார்ந்த சமூகமாகமாறத் தேவையான அடிப்படை காரணிகள்

மேற்குலகம் அறிவிலும் மற்றும் பலதுறைகளிலும் முதன் முதலில் பெரிய அளவில் முன்னேறி அறிவார்ந்த சமூகமாக உள்ளது,  ஆனால் நம்மால் இன்னும் அறிவியலைத் தமிழில் கொண்டுவருவதற்கே முடியவில்லை. நாமும் ஒரு அறிவார்ந்த சமூகமாக மாறி புதிய அறிவியல் தத்துவங்களை தமிழில் படைக்க நாம் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி பலருக்கும் உண்டு.  சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு … Continue reading

Posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு | 4 Comments

ஒரு சமூகத்தின் நான்கு படிநிலை சுழற்சி

சமூக அடையாளம் [1] என்ற நூலில் ஸ்டீபன் ஓர்செல் அவர்கள் குழுக்களின்  படிநிலை வளர்ச்சியை ஆராய்ந்து ஒரு பொது தத்துவத்தை முன்வைக்கிறார். இத்தத்துவம் தமிழ் சமூகம் எந்நிலையில் இருக்கிறது எதை நோக்கி செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு  உதவும் என்பதால் இக்கட்டுரையை எழுதுகிறேன்.  மற்றபடி நான் எது சரி, எது தவறு, என்ற  விவாதத்தில் ஈடுபடவில்லை; … Continue reading

Posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு | 1 Comment

அறிவியலும் தமிழர் அரசியலும்

ஒரு சமூகம் தன்னுடைய அரசியல் இலக்கை அடைய என்ன செய்யவேண்டும்? தன்னை எவ்வாறு ஒரு வல்லமையான சமூகமாக மாற்றுவது? தன்னை அழியாமல் காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? இந்த கேள்விகள் அனைத்து சமூகங்களுக்கும் முக்கியமானவை, குறிப்பாக இன்றைய சூழலில் தமிழ்ச் சமூகத்திற்கு மிகமுக்கியமானவை. இக்கேள்விகளுக்கு தற்பொழுதுள்ள பதில்கள் இவ்வாறு இருக்கின்றன: 1. நாம் காண்பது ஒரு அரசியல் … Continue reading

Posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு, Uncategorized | Tagged , , , | Leave a comment