Category Archives: பகுத்தறிவு

பகுதி 1: இன அரசியல் – இன எழுச்சி எவ்வாறு ஏற்படுகிறது?

இன்று தமிழினம் ஈழத்திலும்  தமிழகத்திலும் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும்  பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள், குறிப்பாகத் தமிழகத்தில், கவலை கொள்வதாகத் தெரியவில்லை.  நம்மால் மக்களிடையே ஒரு இன எழுச்சியை உருவாக்க முடிந்தால், நமது சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எளிதாகும். அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் செயல்பாடுகளின் அடிப்படை நோக்கமும் அதுபோன்ற ஓர் எழுச்சியை உருவாக்குவதே. … Continue reading

Posted in அரசியல், சமூக அறிவியல், தமிழ்த்தேசியம், பகுத்தறிவு, Uncategorized | 4 Comments

தமிழ்த் தேசிய அரசியலுக்கான வெற்றிப் பாதை

தமிழ்த்தேசிய அரசியலில் பல அரசியல் கட்சிகள்  உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவப்  பாதையில் பயணிக்கின்றன,  ஒவ்வொன்றும் அவர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையில் செயல்படுகின்றன.  இங்கே எழும் ஒரு முக்கியமானக் கேள்வி என்னவெனில், தமிழ்த் தேசியம் வெற்றி பெறுவதற்கான பாதை என்று ஒன்று உள்ளதா இல்லையா? அப்படி ஒரு பாதை இருக்கிறதென்றால், தங்கள் முயற்சியை வீணடிக்காமல் அனைவரும்  … Continue reading

Posted in அரசியல், தத்துவம், தமிழ்த்தேசியம், பகுத்தறிவு, Uncategorized | Leave a comment

பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்

நான் அண்மையில் ரவி வைத்தீசு[1] அவர்களின் தமிழ்த்தேசியம் பற்றிய நூலையும் மற்றும் தேசியம் சார்ந்த சில நூல்களையும்[2,3] படித்தேன். அவற்றிலிருந்து சில முக்கியமான கருத்துக்களைப் பகிர்வதுதான் இந்தக்கட்டுரையின்  நோக்கம். தமிழ்த்தேசியம் என்பது பொதுவாக  நீதிக்கட்சி , சுயமரியாதை மற்றும் திராவிட இயக்கங்களின் அரசியல் செயல்பாட்டாக மட்டுமே அறியப்படுகிறது.  ஆனால் தமிழ்த்தேசியம் அரசியல் தளத்தில் செயல்படுவதற்கு முன்பாக … Continue reading

Posted in அரசியல், சமூகம், தமிழ்த்தேசியம், பகுத்தறிவு, மொழி, Uncategorized | 6 Comments

தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது?

இதை நான் ஒரு மேலோட்ட கேள்வியாகப்  பார்க்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் பல காரணங்கள்  தென்படும். எது முதன்மையானது என்று எதனிடப்படையில் ஆராய்வது?  இக்கட்டுரையின் நோக்கம் அனைத்தையும் சுருக்கி ஒரே ஒரு விடையளிப்பதே. அதன் வழியாக இன்றும் நாம் காணும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எவ்வாறு  செயல்படவேண்டும் என்றும் பார்க்கலாம். முதலில் ஒரு அடிப்படையான அறிவியல் கருத்தை அனைவரும்  … Continue reading

Posted in அரசியல், அறிவியல், சமூக அறிவியல், சமூகம், தத்துவம், பகுத்தறிவு | 1 Comment

யார் ஆட்சி செய்வது?

இந்தக்கேள்வி இன்று தமிழக அரசியலில் முக்கியமானதாகப்  பார்க்கப்படுகிறது. நமது அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் அரசியல் தலைமை சரியில்லை, அதனால் தலைமையை சரி செய்தால் சிக்கல்களைத் தீர்த்துவிடலாம் என்ற சிந்தனை பரவலாக நிலவுகிறது. நல்ல தலைமை முக்கியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது, ஆனால் இது பல முக்கியக் கேள்விகளை மறைக்கிறது:   ஒரு நல்ல தலைமையினால் சிக்கல்களை எவ்வளவு … Continue reading

Posted in அரசியல், அறிவு, சமூகம், தத்துவம், பகுத்தறிவு, Uncategorized | 5 Comments

அறிவின் தன்மைகள்

1. புதிய முக்கிய கருத்துக்கள் பெரும்பாலும் நமது பழைய கருத்துக்களை தவறாக்கும். அறிவு என்பது கூட்டிக்கொண்டே செல்வதல்ல, பழையவற்றை கழிப்பதும் ஆகும். நமது கருத்துக்கள் தவறாக இருக்கலாம் என்ற எண்ணமில்லாமல், புதிய உண்மைகளை கற்க முடியாது, படைக்க முடியாது. [1,7] 2. புதிய அறிவு என்பது பொது வாக்கெடுப்பு மூலம் வருவதல்ல. ஒருவரால் அல்லது மிகச்சிறிய … Continue reading

Posted in அறிவியல், அறிவு, பகுத்தறிவு, Uncategorized | Leave a comment

ஒரு சமூகத்தை அழிவிலிருந்து காப்பது எது?

உலகில் சில நாடுகள் முன்னேறிய நாடுகளாக  இருக்கின்றன, சில நாடுகள் பின்தங்கி வறுமையில் இருக்கின்றன, இன்னும்  சில நாடுகள் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு சிறிது சிறிதாக அழிக்கப்படுகின்றன. இரண்டு வாரத்திற்கு ஒருமொழி என்ற வீதத்தில் இவ்வுலகில் பேசுவோர் யாருமில்லாமல் நிரந்தரமாக மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன[1]. அதுபோக மனித வரலாற்றில் இதுவரை அழிந்த சமூகங்கள் எண்ணற்றவை.  இதிலிருந்து ஒரு … Continue reading

Posted in அரசியல், அறிவு, சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு | Leave a comment