Category Archives: தமிழ்த்தேசியம்

பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம்

நீண்ட காலமாக ஒரு தலைமையைப் பற்றி நிலவும் பொதுவான கருத்து என்னவெனில் தலைவர் என்பவர் சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் போன்று திட்டமிட்டு காய்களை நகர்த்துபவர். அவர் திட்டமிடுவார், அதன்படி படைகள் நகர்த்தப்படும். அவர்கீழ் வரும் அனைவரும் அவர் கட்டளைப்படி செயல்படுவர். இதுபோன்ற பார்வையே பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் பற்றியும் பரவலாக தமிழுலகத்தில் பார்க்கப்படுகிறது.  இதில் சிக்கல் … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், Uncategorized | Leave a comment

குழுக்களின் குழு: தமிழ்தேசியத்திற்கான ஒரு மறுசீரமைப்பு

கட்டுரையை கீழுள்ள சுட்டியில் படிக்கவும்: குழுக்களின் குழு: தமிழ்தேசியத்திற்கான ஒரு மறுசீரமைப்பு

Posted in தமிழ்த்தேசியம் | Leave a comment

தேவை ஒரு தமிழ்த்தேசிய சிந்தனை மையம்

அண்மையில் அண்ணன் ஆழி செந்தில்நாதன் அவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்த்தேசியத்திற்கு என்று  ஒரு சிந்தனை மையத்தை (Think Tank) உருவாக்கவேண்டும் என்ற கனவினை என்னிடம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக அவருடனும் மேலும் சில நண்பர்களுடனும், குறிப்பாக செ. இரா. செல்வக்குமார், Sam Vijay, வித்தியாசகர், Hv. Vichu  [1] அவர்களுடன்  நேரடி சந்திப்பும் முகநூல் … Continue reading

Posted in தமிழ்த்தேசியம், Uncategorized | 2 Comments

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம்

இறுதி ஈழப்போரைப் பற்றி அலசும்பொழுது சிலர் மேற்கொள்ளும் ஒரு தவறான முடிவு என்னவென்றால்,  புலிகள் தங்கள் இலக்கை அடையமுடியவில்லை, அதனால் அவர்களின் ஒட்டுமொத்த உத்திகளும் தவறு என்று. இது ஒரு தவறான மிகமிக எளிமையான பார்வை. நமது இலக்கு என்ன, அதை அடைய என்ன செய்யவேண்டும் ஆகியன தெளிவாக எளிமையாக இருக்கும்பொழுதே (linear problems) இதுபோன்ற … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், தமிழ்த்தேசியம், Uncategorized | 1 Comment

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 6

பாடம் 6: நம்பிக்கை இல்லாமல் தேசம் இல்லை   புலிகள் இயக்கம் என்பது ஒரு சிக்கலான அமைப்பு. புலிகளால் எவ்வாறு உலகம் வியக்கும் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது என்பதற்கு ஒரே ஒரு காரணத்தை மட்டும் கூற முடியாது.   சிக்கலான அமைப்புகளின் தன்மை அப்படி.   புலிப்பண்பாடு, உத்திகள்,  பரிணாமம், தலைமை [2,3,4,5]  என பல்வேறு காரணிகளின் கூட்டு … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், தமிழ்த்தேசியம் | 3 Comments

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 5

பாடம் 5: சிக்கனமாக இயங்கி வாய்ப்புகளைப் பெருக்கும் இயக்கமே வெற்றி பெரும் ஒரு லிட்டர்  தேனைக் கொண்டு  ஒரு தேனீ உலகை பலமுறை சுற்றி  வந்துவிடும். மனிதமூளை மிகக்குறைந்த அளவு சக்தியைக் கொண்டு,  பல கணிப்புகளில் பலமடங்கு அதிக சக்தியை உள்வாங்கும் கணினியைவிட வேகமாகவும் சிறப்பாகவும் கணிக்கிறது. இத்தனைக்கும் தேனீயையோ மனிதனையே யாரும் திட்டமிட்டு உருவாக்கவில்லை. … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், Uncategorized | 5 Comments

தெர்மாப்பிளையும் நந்திக்கடலும்

கி.மு 480-இல் பெர்சியப் படைகள் கிரேக்க நாட்டின்மீது பெரும்படை கொண்டு போர் தொடுத்தது. அதை முதன் முதலில் சுபார்ட்டா நாட்டு மன்னர் லியோனாடைசு  300 வீரர்களுடன் தெர்மாப்பிளையில் எதிர்கொண்டு போரிட்டு அனைவரும் வீரமரணம் அடைகின்றனர். ஒரு வீரன் அந்தச் செய்தியை  ஏதென்சு நாட்டின் தளபதி தெர்மக்கலீசிடம் “தெர்மாப்பிளையில் தோற்றுவிட்டோம்” என்று கூறுகிறார்.  அதற்கு தெர்மக்கலீசு “அது … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், Uncategorized | 3 Comments