Category Archives: தத்துவம்

அறிவில் எதிரும் புதிரும்

புத்திசாலியான ஒன்றை உருவாக்க புத்திசாலி தேவையில்லை – இடார்வினின் பரிணாம தத்துவம் கணக்கு போட கணக்கு தெரியவேண்டிய அவசியமில்லை – டூரிங்கின் கணினி தத்துவம் ஒரு ஏரண (logical) அமைப்பால்  அதன் ஏரணத்தை நிரூபிக்க முடியாது –  கோடாலின் தத்துவம் மனிதர்களின் சுயநல செயல்பாட்டால் கூட்டு ஒத்துழைப்பை உருவாக்க முடியும் – ஆடம் சுமித்தின் பொருளாதாரத் … Continue reading

Posted in அறிவியல், தத்துவம், Uncategorized | Leave a comment

பிளேட்டோவின் கனவுதேசம், இந்துத்வா, தமிழ்த்தேசியம்

அழிவின் விளிம்பிலிருந்த அன்றைய கிரேக்க நாடான ஏதென்சின் நிலைமையைக் கண்டு கலங்கிய தத்துவமேதை பிளேட்டோ, ஒரு திடமான என்றுமே அழியாத ஏதென்சு நாட்டை உருவாக்க என்ன செய்யவேண்டும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். அன்றைய அருகிலுள்ள  நாடுகளை எல்லாம் ஆராய்ந்து, ஒரு கனவு தேசத்திற்கான (Utopia) திட்டத்தை உருவாக்குகிறார். அதுதான் பிளேட்டோவின் உலகப்புகழ்பெற்ற “குடியரசு” (The Republic) … Continue reading

Posted in அரசியல், அறிவு, தத்துவம், தமிழ்த்தேசியம், Uncategorized | 1 Comment

பகுதி 2: இன அரசியல் – நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

உண்மை என்பது சிக்கலானது. அதை நாம் பார்த்து உணர்வதில்லை, மாறாக நாம் தத்துவங்களின் வழியாகவே பார்க்கிறோம்  என்கிறார் பாப்பர் [3]. உலகில் எந்த ஒரு தத்துவமும் உண்மையை முழுதுமாக பிரதிபலிப்பதில்லை. அதனால் ஒரு தத்துவம் என்றில்லாமல், அனைத்து தத்துவங்களின் வழியாகவும் பார்த்து  அறிந்து கொள்வதே சிறப்பான புரிதலைத் தரும் [4].  முதல்  பகுதி கட்டுரையில் “பகுதி … Continue reading

Posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், தத்துவம், தமிழ்த்தேசியம், Uncategorized | Leave a comment

தமிழ்த் தேசிய அரசியலுக்கான வெற்றிப் பாதை

தமிழ்த்தேசிய அரசியலில் பல அரசியல் கட்சிகள்  உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவப்  பாதையில் பயணிக்கின்றன,  ஒவ்வொன்றும் அவர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையில் செயல்படுகின்றன.  இங்கே எழும் ஒரு முக்கியமானக் கேள்வி என்னவெனில், தமிழ்த் தேசியம் வெற்றி பெறுவதற்கான பாதை என்று ஒன்று உள்ளதா இல்லையா? அப்படி ஒரு பாதை இருக்கிறதென்றால், தங்கள் முயற்சியை வீணடிக்காமல் அனைவரும்  … Continue reading

Posted in அரசியல், தத்துவம், தமிழ்த்தேசியம், பகுத்தறிவு, Uncategorized | Leave a comment

தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது?

இதை நான் ஒரு மேலோட்ட கேள்வியாகப்  பார்க்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் பல காரணங்கள்  தென்படும். எது முதன்மையானது என்று எதனிடப்படையில் ஆராய்வது?  இக்கட்டுரையின் நோக்கம் அனைத்தையும் சுருக்கி ஒரே ஒரு விடையளிப்பதே. அதன் வழியாக இன்றும் நாம் காணும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எவ்வாறு  செயல்படவேண்டும் என்றும் பார்க்கலாம். முதலில் ஒரு அடிப்படையான அறிவியல் கருத்தை அனைவரும்  … Continue reading

Posted in அரசியல், அறிவியல், சமூக அறிவியல், சமூகம், தத்துவம், பகுத்தறிவு | 1 Comment

திறந்த வெளியில் பூட்டப்பட்ட உலகு

ஒரு முறை நண்பர்களுடன் “அறை தப்பித்தல் (Escape Room)” [1] என்ற ஒரு விளையாட்டில் பங்கு பெற்றேன். இவ்விளையாட்டில் ஒரு அறைக்குள் கூட்டிச்சென்று நம்மை அடைத்து விடுவார்கள். அவ்வறைக்குள் ஒரு இரகசியக்  கதவு இருக்கும், ஆனால் எங்கிருக்கிறது என்று பார்த்தால் தெரியாது. அவ்வறைக்குள் பல புதிர்கள் இருக்கும். அவை என்ன புதிர்கள்,  எப்படித் தீர்ப்பது, எதை … Continue reading

Posted in அறிவியல், தத்துவம், Uncategorized | Leave a comment

யார் ஆட்சி செய்வது?

இந்தக்கேள்வி இன்று தமிழக அரசியலில் முக்கியமானதாகப்  பார்க்கப்படுகிறது. நமது அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் அரசியல் தலைமை சரியில்லை, அதனால் தலைமையை சரி செய்தால் சிக்கல்களைத் தீர்த்துவிடலாம் என்ற சிந்தனை பரவலாக நிலவுகிறது. நல்ல தலைமை முக்கியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது, ஆனால் இது பல முக்கியக் கேள்விகளை மறைக்கிறது:   ஒரு நல்ல தலைமையினால் சிக்கல்களை எவ்வளவு … Continue reading

Posted in அரசியல், அறிவு, சமூகம், தத்துவம், பகுத்தறிவு, Uncategorized | 6 Comments