Category Archives: சமூக அறிவியல்

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 2

பாடம் 2: தமிழ்த்தேசியத்தை பரிணமித்துதான் வெல்ல முடியும் புலிகளால் ஈழப் போர்களில் உலகை வியக்கவைக்கும் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது. இது எவ்வாறு சாத்தியமானது?  இதற்கு பெரும்பாலானோர் கூறும் காரணம்   பிரபாகரனின் நிகரற்ற தலைமை என்பதே. இதில் எந்த பெரிய  மாற்றுக் கருத்து யாருக்கும்  இருக்க முடியாது. ஆனால் இதுபோன்ற விளக்கங்களின் சிக்கல் என்னவென்றால், இனி வெற்றிகரமான … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், ஈழம், சமூக அறிவியல், தமிழ்த்தேசியம், Uncategorized | 3 Comments

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 1

இனவழிப்பில் முடிந்த  ஈழப்போரைப்  பற்றிய இராணுவ மட்டும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் பெரும்பாலும் அதிலிருந்து எப்படி “தீவிரவாதத்தை” ஒழிக்கலாம்,  எப்படி இன அமைதியை ஏற்படுத்தலாம் என்ற பார்வையிலேயே இருக்கும்.  உலக நாடுகளைப் பொறுத்தவரை இந்த உலக ஒழுங்கு காக்கப்படவேண்டும், அப்பொழுது சிலநேரம் இனவழிப்பு ஏற்படும், அதைப் பெரிது படுத்தினால் உலக ஒழுகிற்குத்தான் ஆபத்தானது,  அவ்வொழுங்கில் எவ்வாறு … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், ஈழம், சமூக அறிவியல், சமூகம், தமிழ்த்தேசியம், Uncategorized | 13 Comments

பகுதி 2: இன அரசியல் – நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

உண்மை என்பது சிக்கலானது. அதை நாம் பார்த்து உணர்வதில்லை, மாறாக நாம் தத்துவங்களின் வழியாகவே பார்க்கிறோம்  என்கிறார் பாப்பர் [3]. உலகில் எந்த ஒரு தத்துவமும் உண்மையை முழுதுமாக பிரதிபலிப்பதில்லை. அதனால் ஒரு தத்துவம் என்றில்லாமல், அனைத்து தத்துவங்களின் வழியாகவும் பார்த்து  அறிந்து கொள்வதே சிறப்பான புரிதலைத் தரும் [4].  முதல்  பகுதி கட்டுரையில் “பகுதி … Continue reading

Posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், தத்துவம், தமிழ்த்தேசியம், Uncategorized | Leave a comment

பகுதி 1: இன அரசியல் – இன எழுச்சி எவ்வாறு ஏற்படுகிறது?

இன்று தமிழினம் ஈழத்திலும்  தமிழகத்திலும் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும்  பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள், குறிப்பாகத் தமிழகத்தில், கவலை கொள்வதாகத் தெரியவில்லை.  நம்மால் மக்களிடையே ஒரு இன எழுச்சியை உருவாக்க முடிந்தால், நமது சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எளிதாகும். அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் செயல்பாடுகளின் அடிப்படை நோக்கமும் அதுபோன்ற ஓர் எழுச்சியை உருவாக்குவதே. … Continue reading

Posted in அரசியல், சமூக அறிவியல், தமிழ்த்தேசியம், பகுத்தறிவு, Uncategorized | 4 Comments

இன அடையாளம்

யார் தமிழர் என்று அவ்வப்போது சர்ச்சை எழுந்து கொண்டிருக்கிறது.  இனத்துக்கான வரையறையை பலர் பல்வேறு விதமாக வைக்கிறார்கள். ஒரு இனக்குழுமம் என்றால் என்ன என்று ஒரு சரியான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு இனக்குழுமத்தைப் பற்றி  அறிவியலாளர்கள் என்ன கூறுகிறார்கள், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம். அறிவியலாளர்கள் வரலாற்றில் தோன்றிய  … Continue reading

Posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், தமிழ், தமிழ்த்தேசியம், மொழி, Uncategorized | Leave a comment

தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது?

இதை நான் ஒரு மேலோட்ட கேள்வியாகப்  பார்க்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் பல காரணங்கள்  தென்படும். எது முதன்மையானது என்று எதனிடப்படையில் ஆராய்வது?  இக்கட்டுரையின் நோக்கம் அனைத்தையும் சுருக்கி ஒரே ஒரு விடையளிப்பதே. அதன் வழியாக இன்றும் நாம் காணும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எவ்வாறு  செயல்படவேண்டும் என்றும் பார்க்கலாம். முதலில் ஒரு அடிப்படையான அறிவியல் கருத்தை அனைவரும்  … Continue reading

Posted in அரசியல், அறிவியல், சமூக அறிவியல், சமூகம், தத்துவம், பகுத்தறிவு | 1 Comment

சமூகத்தைப் பற்றி நமது சிந்தனைகளில் உள்ள தவறான கருதுகோள்கள்

நமது சமூகத்திலுள்ள சிக்கல்களைத் தீர்க்க நாம் ஆராயும் பொழுது, நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ சில கருதுகோள்களை நாம்  உண்மை என்று எடுத்துக்கொண்டு சிக்கல்களுக்குத் தீர்வுகாண முயல்கிறோம். அவ்வாறான கருதுகோள்கள்  தவறாக இருந்தால், நமது தீர்வுகள் முற்றிலும் தவறாகவோ அல்லது நாம் எதிர்பார்க்கிறப் பலனைத் தராமல் வீரியமற்றதாகவோ இருக்கும். சமூகம் போன்ற சிக்கலான அமைப்புகளில் உள்ள பிரச்சினைகளுக்குத் … Continue reading

Posted in அரசியல், அறிவு, சமூக அறிவியல், சமூகம், Uncategorized | 6 Comments