Category Archives: ஈழப்போர்

மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை

ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ [2]. ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்;  ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும்  அபூர்வம்.  ஆனால்  சிலநேரம் அனைத்தையும் மீறி அவ்வாறான தத்துவ அரசன் தோன்றுவதுண்டு.  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ரோமாபுரிப் பேரரசை  ஆண்ட மார்க்கசு … Continue reading

Posted in ஈழப்போர், பிரபாகரன், Uncategorized | 1 Comment

பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம்

நீண்ட காலமாக ஒரு தலைமையைப் பற்றி நிலவும் பொதுவான கருத்து என்னவெனில் தலைவர் என்பவர் சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் போன்று திட்டமிட்டு காய்களை நகர்த்துபவர். அவர் திட்டமிடுவார், அதன்படி படைகள் நகர்த்தப்படும். அவர்கீழ் வரும் அனைவரும் அவர் கட்டளைப்படி செயல்படுவர். இதுபோன்ற பார்வையே பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் பற்றியும் பரவலாக தமிழுலகத்தில் பார்க்கப்படுகிறது.  இதில் சிக்கல் … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், பிரபாகரன், Uncategorized | 4 Comments

பிரபாகரனின் முடிவிலா ஆட்டம்

இவ்வுலகில் இருவகையான ஆட்டங்கள் உள்ளன. ஒன்று முடிவுறும் ஆட்டம் (finite game), இன்னொன்று முடிவிலா ஆட்டம் (infinite game) [1]. முடிவுறும் ஆட்டம் வெற்றிக்காக ஆடப்படுகிறது. முடிவிலா ஆட்டம் ஆட்டத்தின் தொடர்ச்சிக்காக ஆடப்படுகிறது. பிரபாகரனின் ஆட்டம் முடிவிலா ஆட்டம்;    இன்றைய பெரும்பாலான அரசியல் தலைமைகள் விளையாடுவது முடிவுறும் ஆட்டம்.   புரிதலுக்காக இனி முடிவிலா ஆட்டத்தை பிரபா … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், பிரபாகரன், Uncategorized | 4 Comments

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம்

இறுதி ஈழப்போரைப் பற்றி அலசும்பொழுது சிலர் மேற்கொள்ளும் ஒரு தவறான முடிவு என்னவென்றால்,  புலிகள் தங்கள் இலக்கை அடையமுடியவில்லை, அதனால் அவர்களின் ஒட்டுமொத்த உத்திகளும் தவறு என்று. இது ஒரு தவறான மிகமிக எளிமையான பார்வை. நமது இலக்கு என்ன, அதை அடைய என்ன செய்யவேண்டும் ஆகியன தெளிவாக எளிமையாக இருக்கும்பொழுதே (linear problems) இதுபோன்ற … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், தமிழ்த்தேசியம், Uncategorized | 3 Comments

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 6

பாடம் 6: நம்பிக்கை இல்லாமல் தேசம் இல்லை   புலிகள் இயக்கம் என்பது ஒரு சிக்கலான அமைப்பு. புலிகளால் எவ்வாறு உலகம் வியக்கும் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது என்பதற்கு ஒரே ஒரு காரணத்தை மட்டும் கூற முடியாது.   சிக்கலான அமைப்புகளின் தன்மை அப்படி.   புலிப்பண்பாடு, உத்திகள்,  பரிணாமம், தலைமை [2,3,4,5]  என பல்வேறு காரணிகளின் கூட்டு … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், தமிழ்த்தேசியம் | 4 Comments

சுபார்ட்டா (Sparta) எனும் விசித்திர நாடும் புலிகளின் ஈழமும்

இவ்வுலகில் பல விசித்திரமான அரசியல் தத்துவங்களும் சோதனைகளும் தோன்றியுள்ளன, ஆனால் யாரும் கி.மு 800-இல் சுபார்ட்டாவில் நடந்த விசித்திரமான சோதனைகளைப்போல செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.  பிளேட்டோவின் “The Republic” என்ற நூலே சுபார்ட்டாவின் சோதனையிலிருந்து எடுத்துக்கொண்ட கருத்துக்கள்தான். இவ்வுலகில் தோன்றிய அனைத்து  (மார்க்சு உட்பட)  சமத்துவ கனவுதேச சித்தாந்தங்களின் மூலவேர் சுபார்ட்டா தான். அன்றைய சுபார்ட்டாவில் … Continue reading

Posted in ஈழப்போர், ஈழம், Uncategorized | 2 Comments

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 5

பாடம் 5: சிக்கனமாக இயங்கி வாய்ப்புகளைப் பெருக்கும் இயக்கமே வெற்றி பெரும் ஒரு லிட்டர்  தேனைக் கொண்டு  ஒரு தேனீ உலகை பலமுறை சுற்றி  வந்துவிடும். மனிதமூளை மிகக்குறைந்த அளவு சக்தியைக் கொண்டு,  பல கணிப்புகளில் பலமடங்கு அதிக சக்தியை உள்வாங்கும் கணினியைவிட வேகமாகவும் சிறப்பாகவும் கணிக்கிறது. இத்தனைக்கும் தேனீயையோ மனிதனையே யாரும் திட்டமிட்டு உருவாக்கவில்லை. … Continue reading

Posted in அரசியல், ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், Uncategorized | 6 Comments