Category Archives: அறிவியல்

அறிவில் எதிரும் புதிரும்

புத்திசாலியான ஒன்றை உருவாக்க புத்திசாலி தேவையில்லை – இடார்வினின் பரிணாம தத்துவம் கணக்கு போட கணக்கு தெரியவேண்டிய அவசியமில்லை – டூரிங்கின் கணினி தத்துவம் ஒரு ஏரண (logical) அமைப்பால்  அதன் ஏரணத்தை நிரூபிக்க முடியாது –  கோடாலின் தத்துவம் மனிதர்களின் சுயநல செயல்பாட்டால் கூட்டு ஒத்துழைப்பை உருவாக்க முடியும் – ஆடம் சுமித்தின் பொருளாதாரத் … Continue reading

Posted in அறிவியல், தத்துவம், Uncategorized | Leave a comment

தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது?

இதை நான் ஒரு மேலோட்ட கேள்வியாகப்  பார்க்கவில்லை. மேலோட்டமாக பார்த்தால் பல காரணங்கள்  தென்படும். எது முதன்மையானது என்று எதனிடப்படையில் ஆராய்வது?  இக்கட்டுரையின் நோக்கம் அனைத்தையும் சுருக்கி ஒரே ஒரு விடையளிப்பதே. அதன் வழியாக இன்றும் நாம் காணும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எவ்வாறு  செயல்படவேண்டும் என்றும் பார்க்கலாம். முதலில் ஒரு அடிப்படையான அறிவியல் கருத்தை அனைவரும்  … Continue reading

Posted in அரசியல், அறிவியல், சமூக அறிவியல், சமூகம், தத்துவம், பகுத்தறிவு | 1 Comment

திறந்த வெளியில் பூட்டப்பட்ட உலகு

ஒரு முறை நண்பர்களுடன் “அறை தப்பித்தல் (Escape Room)” [1] என்ற ஒரு விளையாட்டில் பங்கு பெற்றேன். இவ்விளையாட்டில் ஒரு அறைக்குள் கூட்டிச்சென்று நம்மை அடைத்து விடுவார்கள். அவ்வறைக்குள் ஒரு இரகசியக்  கதவு இருக்கும், ஆனால் எங்கிருக்கிறது என்று பார்த்தால் தெரியாது. அவ்வறைக்குள் பல புதிர்கள் இருக்கும். அவை என்ன புதிர்கள்,  எப்படித் தீர்ப்பது, எதை … Continue reading

Posted in அறிவியல், தத்துவம், Uncategorized | Leave a comment

கல்வியில் யூதர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு பாடம்

எட்வர்டு பிரன்கலின் Love and Math   நூலில் இருந்து: சோவியத்து யூனியனில் யூதர்களுக்கு எதிராக உயர் ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் சேர்க்கைக்குத்  மறைமுகமானத் தடை இருந்தது. அப்பொழுது அங்கு பிறந்த  எட்வர்டு பிரன்கல்  (Edward Frenkel)  அனைத்து  தடைகளையும் தாண்டி 21-வயதிற்குள்  கணிதத்தில் பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்தார். முனைவர் பட்டம் கூடப் பெறாத அவரை … Continue reading

Posted in அறிவியல், கணிதம், கல்வி, சமூகம், தமிழ், தமிழ்வழிக் கல்வி, Uncategorized | Leave a comment

கணித அழகு

கணிதம் என்பது எண்கள் என்ற பார்வை தவறானது. கணிதம் என்பது கோலம் போன்றது,  அழகானது. அழகற்ற  கோலம் எப்படி கோலம் ஆகாதோ, அதுபோல அழகற்ற கணிதமும் கணிதம் ஆகாது.  கோலங்கள் (patterns) நமது கற்பனையில் உருவாவது,   எண்ணிக்கையில் அளவில்லாதது.  கணிதமும் அதுபோன்றதுதான். புதிய புதிய கணிதங்களைப் போட்டுக்கொண்டே போகலாம், எல்லை இல்லாதது.  [1] The mathematician’s … Continue reading

Posted in அறிவியல், கணிதம், தத்துவம், தமிழ், Uncategorized | Tagged | Leave a comment

தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்

தாய்மொழி வழிக் கல்வியே மாணவர்களின் கல்விக்கு சிறந்தது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன[1]. அதுபோக தமிழ்வழிப் பள்ளிகளே இன்று தமிழர் என்ற அடையாளத்தை ஊக்குவிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் பலகாலமாக ஆங்கிலவழிப் பள்ளிகளும், மத்திய பாடத்திட்டங்களும் பெரிய அளவில் தமிழ்ப்பள்ளிகளை அழித்து வருகின்றன. இன்று அவை இன்னும் வீரியத்துடன் செயல்படுகின்றன. அதனால் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களின் … Continue reading

Posted in அறிவியல், அறிவு, கல்வி, தமிழ், தமிழ்வழிக் கல்வி, மொழி | 8 Comments

அறிவின் தன்மைகள்

1. புதிய முக்கிய கருத்துக்கள் பெரும்பாலும் நமது பழைய கருத்துக்களை தவறாக்கும். அறிவு என்பது கூட்டிக்கொண்டே செல்வதல்ல, பழையவற்றை கழிப்பதும் ஆகும். நமது கருத்துக்கள் தவறாக இருக்கலாம் என்ற எண்ணமில்லாமல், புதிய உண்மைகளை கற்க முடியாது, படைக்க முடியாது. [1,7] 2. புதிய அறிவு என்பது பொது வாக்கெடுப்பு மூலம் வருவதல்ல. ஒருவரால் அல்லது மிகச்சிறிய … Continue reading

Posted in அறிவியல், அறிவு, பகுத்தறிவு, Uncategorized | Leave a comment