தெர்மாப்பிளையும் நந்திக்கடலும்

கி.மு 480-இல் பெர்சியப் படைகள் கிரேக்க நாட்டின்மீது பெரும்படை கொண்டு போர் தொடுத்தது. அதை முதன் முதலில் சுபார்ட்டா நாட்டு மன்னர் லியோனாடைசு  300 வீரர்களுடன் தெர்மாப்பிளையில் எதிர்கொண்டு போரிட்டு அனைவரும் வீரமரணம் அடைகின்றனர். ஒரு வீரன் அந்தச் செய்தியை  ஏதென்சு நாட்டின் தளபதி தெர்மக்கலீசிடம் “தெர்மாப்பிளையில் தோற்றுவிட்டோம்” என்று கூறுகிறார்.  அதற்கு தெர்மக்கலீசு “அது தோல்வியல்ல, அதுதான் இருப்பதிலேயே மகத்தான வெற்றி. இது மொத்த கிரேக்க நாடுகளையும்  ஒன்று திரட்டி பெர்சியாவை  ஓட விரட்டும்” என்கிறார். முடிவில் அதுதான் நடந்தது. இறுதியில் தெர்மக்கலீசின் தலைமையில் சலாமிசில் நடந்த கடற்போரில் பெர்சியாவின் கப்பல்கள் நொறுக்கப்பட்டு பெர்சியப்படைகள் தோற்று ஓடின. அதன்பிறகுதான் கிரேக்கர்களின் பொற்காலம் ஏற்பட்டது. இன்று உலகில் உள்ள பெரும்பாலானோருக்கு கிரேக்கர்களின் சாதனைகள் என்ன, அவர்கள் எந்தெந்த போரில் வெற்றிபெற்றார்கள் என்று தெரியாது. ஆனால் பெரும்பாலோனருக்குத் தெரிவது அந்த 300 பேர் எதிர்த்து போர் புரிந்து இறந்ததுதான். ஏனென்றால் அதுதான்   மகத்தான வெற்றி. ஒரு போர் வெற்றியில் முடிந்ததா அல்லது தோல்வியில் முடிந்ததா என்பது அந்தப்போரின் உடனடி முடிவு தீர்மானிப்பதல்ல. அது எதுமாதிரியான வரலாற்றுப்  பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே முடிவு செய்கிறது.  அந்தவகையில் தெர்மாப்பிளையின் தாற்காலிகத் தோல்வி இறுதியில் மகத்தான வெற்றியைப் பெற்றுத்ததந்தது. அதுவே கிரேக்கர்களின் பொற்காலத்திற்கும் அடிப்படையாக இருந்தது.

இன்று தமிழினமும் கிரேக்கர்கள் எதிர்நோக்கிய வரலாற்றுப் பாதையிலேதான் செல்கிறது. பெரும்பாலானோர்  நாம் ஈழ இறுதிப்போரில் தோல்வியுற்றோம் என்று வரலாறு தெரியாமல் குழம்பிக் கிடக்கின்றனர். முள்ளிவாய்க்காலிலும் நந்திக்கடலில் சுதந்திரம்தான் குறிக்கோள் என்று ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களும் இறுதிவரைப் போராடி உயிர் துறந்தனர். வரலாற்றின் பார்வையில் இதுதான் தமிழினம் தனது மொத்த வரலாற்றில் படைத்த மாபெரும் வெற்றி. இது ஒன்றுதான்  காலத்திற்கும் நின்று எதிரொலிக்கும். இதுதான் தமிழர் அனைவரையும் ஒன்றிணைத்து மாபெரும் பொற்காலம் படைக்கும்.

அவ்வாறு புலிகள் எதிர்த்து போரிடாமல் சிங்களம் கொடுக்கும் எச்சில் சோற்றுக்கு சரி என்று சொன்னால் என்ன நடந்திருக்கும்? அதுதான் புலிகளின் மாபெரும் தோல்வியாக அமைந்திருக்கும். இப்படித்தான் தமிழ்நாட்டில் திராவிட நாடு அமைப்போம் என்று ஒரு இயக்கம்  வெற்றிகொண்டது. முடிவில் சில தற்காலிக இலாபத்திற்கு திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டு அரசியலிலும்  அதிகாரம் பெற்றது. ஆனால் முடிவு என்ன ஆனது? இன்று பெருபாலான தமிழ்தேசியப் பற்றாளர்கள் பார்வையில், திராவிடக் கட்சிகளின் வெற்றி என்பது மாபெரும் தோல்வியையே பரிசாகக் கொடுத்துள்ளது. இன்று அது  பிழைப்புவாத இயக்கங்கள் என்பது திராவிடக் கொள்கைகளில் உண்மையான பற்றுள்ள பெரியாரியவாதிகளே ஒப்புக்கொள்வார்கள். ஒரு வெற்றி எவ்வாறு படுதோல்வியில் முடியும் என்பதற்கு திராவிடக் கட்சிகளின் வரலாறு சாட்சி.

இறுதிப்போரில் தமிழினம் இருப்பதிலேயே மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்பதை உணர்வதின் மூலமே, தமிழினம் தனது வெற்றிக்கான வரலாற்றுப்பாதையில் கிரேக்கர்களைப் போல பயணிக்க முடியும். அதில்லாமல் தோல்வியுற்றோம் என்று குழம்பிக் கொண்டிருந்தால், நம்மை யாரும் காப்பாற்ற முடியாது. எதிரியும் அதைத்தான் விரும்புவான். நமது வெற்றிக்கான முதல் அடி என்பது, நந்திக்கடலின் வெற்றியை  உணர்ந்து,புலிகளின் ஓர்மத்தை உள்வாங்கி, மக்களிடம் பரப்பி, அனைவரையும் புலிபண்பாட்டின் கீழ் ஒற்றுமைப்படுத்துவதுதான்.

 

புலிப்பண்பாடு:  https://sethusubbar.wordpress.com/2019/02/24/eelamlesson4/

தெர்மாப்பிளை போர்: https://en.wikipedia.org/wiki/Battle_of_Thermopylae

சலாமிசு கடற்போர்: https://en.wikipedia.org/wiki/Battle_of_Salamis

 

சில குறிப்புகள்:
1. நான் புலிகள் செய்தது அனைத்தையும் சரி என்று ஏற்றுக்கொள்வதில்லை. தவறுகளும் ஏற்பட்டுள்ளன.

2. புலிப்பண்பாடு என்று நான் குறிப்பிடுவது, பொதுச்சமூகத்திற்கு ஏற்ப, புலிகளின் பண்பாட்டை மாற்றிய வடிவத்தை குறிக்கும். இதில் அவர்களின் தவறுகளும் நீக்கப்படும்.

3. வெற்றிக்கானப் பாதை என்பது ஆயுதப்போர் என்று எடுத்துக்கொள்ள முடியாது. நமது பாதையை காலம் தீமானிக்கும், வரலாறு வழிநடத்தும்.

4. திராவிட இயக்கங்கள் பல்வகை சீர்திருத்தங்களை ஏற்படுத்தி சமூகத்தை முன்னேற்றி மாற்றி வடிவமைத்தது, மொழியைக் காத்தது என்பவை அவற்றின் வெற்றிதான். ஆனால் இன்று அந்த வெற்றிகளை இயக்கங்கள் பறிகொடுத்துக் கொண்டு இருக்கின்றன. இதில்தான் திராவிட இயக்கங்களின் தோல்வியைப் பார்க்கவேண்டும்.

This entry was posted in ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தெர்மாப்பிளையும் நந்திக்கடலும்

  1. Pingback: தெர்மாப்பிளையும் நந்திக்கடலும்.. | வெளிச்சவீடு

  2. Pingback: தெர்மாப்பிளையும் நந்திக்கடலும் ! | EelamView

  3. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம் | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s