கல்வியில் யூதர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு பாடம்

எட்வர்டு பிரன்கலின் Love and Math   நூலில் இருந்து:

சோவியத்து யூனியனில் யூதர்களுக்கு எதிராக உயர் ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் சேர்க்கைக்குத்  மறைமுகமானத் தடை இருந்தது. அப்பொழுது அங்கு பிறந்த  எட்வர்டு பிரன்கல்  (Edward Frenkel)  அனைத்து  தடைகளையும் தாண்டி 21-வயதிற்குள்  கணிதத்தில் பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்தார். முனைவர் பட்டம் கூடப் பெறாத அவரை அச்சிறிய வயதில்,  ஆர்வர்டு பல்கலை வருகைப்பேராசிரியாக அழைத்து பல ஆராய்ச்சி  பொறுப்புகளை அளித்தது. இன்று அவர் கணிதத்தில் அதிமுக்கிய ஆராய்ச்சியான அனைத்து கணிதப்பிரிவுகளையும் இணைக்கும் இலங்கிலாந்து திட்டத்தில் (Langlands Program) முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறார்.

அவரின் வெற்றிக்காண காரணம் என்ன? அவருக்கு ஆர்வம், விடாமுயற்சி என்று கூறலாம், ஆனால் உண்மையில் அவரின் வெற்றிக்குப் பின்னால் உள்ள ஒரு முக்கிய காரணம் அவர் சார்ந்த  யூத சமூகத்தின் துணை. அவரின் வாழ்க்கைக் குறிப்பிலிருந்து சுருக்கமாக:

  1. அவரின் தாய் தந்தையர் இருவரும் பொறியியலாளர்கள். ஆனால் பிரன்கலுக்கு இயற்பியலில் ஆர்வம் அதிகம். ஒரு முறை அவரின் தாய் கணித ஆசிரியரான யூத நண்பர் ஒருவரிடம் அறிமுகப்படுத்துகிறார். அவர் பிரன்கலிடம் குவாண்ட இயற்பியலில் கணிதம் எவ்வளவு முக்கியத்துவமானது என்ற விளக்கி சில கணித நூல்களை அளிக்கிறார். அவற்றைப்படித்த பிரன்கலுக்கு கணிதத்திடம் தீராத காதல் ஏற்படுகிறது. பள்ளி முடிக்கும் முன்னரே கல்லூரியில் கற்கவேண்டிய  கணிதத்தை  எல்லாம் கணித நண்பர் மூலம் கற்றுக்கொள்கிறார்.
  1. பள்ளி முடித்தவுடன் மாஸ்கோவில் உள்ள கணிதத்தில் அதியுயர் பல்கலையான மேக்மாட்டில் விண்ணப்பிக்கிறார், ஆனால் அனைத்து திறமையும் இருந்தும் அதிக மதிப்பெண்கள் நுழைவுத்தேர்வில் எடுத்தும், நேர்முகத் தேர்வில் யூத எதிர்ப்பினால் நிராகரிக்கப் படுகிறார். அதன்பின் இன்னொரு கல்லூரியில் இணைந்து கணிதம் கற்கிறார், ஆனால் அவர் விரும்பும் தூயக்கணிதம் (Pure Mathematics) அக்கல்லூரியில் கற்பிக்கப் படவில்லை.
  2. யூத எதிர்ப்பை நன்றாக உணர்ந்த யூத சமூகம், கணிதத்தில் சிறந்து விளங்கும் யூத மாணவர்களுக்கு என தனியாக மாலை நேர வகுப்புகளைச் சிறந்த கணித நிபுணர்களைக் கொண்டு மாஸ்கோவில் நடத்தின. ஆனால் இச்செயல்பாட்டைப் பிடிக்காத KGB உளவுத்துறை மாலை வகுப்புகளை ஒழுங்குசெய்து நடத்தி வந்தவரை கொலை செய்கிறது. அதனால் மாலை வகுப்புக்கள் நிரந்தரமாக மூடப்பட்டன. இது  பிரான்கல் கல்லூரியில் சேரும் முன்னே நடந்தது.
  3. ஆனாலும் யூத சமூகம் வேறு முயற்சியை ஆரம்பித்தது. கல்லூரியில் படிக்கும் யூத மாணவர்களுக்கும் கணித நிபுணத்துவம் கொண்ட யூதப்பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்களுக்கும் நேரடித் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. அவர்கள் மாணவர்களை கணிதத்தில் வழி நடத்தினார்கள், கணித ஆராய்ச்சிகளில் நிலவும் ஆர்வமான சிக்கல்களை அவர்களுக்கு அளித்து ஆராய்ச்சி செய்ய உதவினார்கள். அவ்வாறுதான் பிரன்கலும் வழி நடத்தப்பட்டார். அவர் தன்னை வழி நடத்துபவரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். வார இறுதி நாட்களிலும் மணிக்கணக்காக சந்திப்பு நடக்கும், இருவரும் சேர்ந்து ஆராய்ச்சி செய்தார்கள். மேலும் அவரின் மூலம் மற்ற சிறந்த கணித வல்லுனர்களுடனும் (யூதர்கள்) தொடர்பு ஏற்பட்டு அவர்களுடனும் ஆராய்ச்சி செயதார். இவை அனைத்தும் கல்லூரியில் படிக்கும்பொழுதே மாலை நேரங்களில் செய்துகொண்டிருந்தார்.
  1. இருபது வயதிற்குள் கணிதத்தில் அற்புதமான பல கண்டுபிடிப்புகளை செய்கிறார். அப்பொழுதுதான் சோவியத்தின் இறுக்கம் தளர ஆரம்பித்து, மக்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப் பட்டார்கள். அப்பொழுதுதான் ஆர்வர்டு அவரை அழைத்தது.

இவ்வாறான செயல்பாடுகளின் மூலம்தான் பிரான்கல் சாதனை படைக்க முடிந்தது. யூத சமூகம் இல்லாமல் அவரால் செய்ய முடிந்திருக்குமா என்றால் முடியாது என்றுதான் கூறவேண்டும்.

யூத சமூகம் எந்த ஒரு அரசியல் பலம் இல்லாவிட்டாலும் அவர்களின் கூட்டு சமூக செயல்பாடுகளினால் அனைத்து தடைகளையும் உடைத்து  சிறந்த வெற்றியும் அடைகிறார்கள். தமிழ்ச் சமூகம் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று  என்னவென்றால்: அவர்கள் அரசை நம்பவில்லை, ஒரு தலைவனை எதிர் பார்க்கவில்லை. அவர்கள்  ஒரு சமூகமாக இணைந்து உதவிசெய்து ஒவ்வொருவரின் வெற்றிக்கும் பாடுபடுகிறார்கள். இணைந்து தடைகளை உடைக்கிறார்கள். தமிழ்ச்சமூகமும் ஒருவகையில் ஒரு தமிழ் எதிர்ப்பு நிலையை கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் காண்கிறது, குறிப்பாக தமிழ்வழிக் கல்விக்கு பெரிய முட்டுக்கட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை நாம் உடைத்து வெற்றி பெறுவது அவசியமாகிறது. யூதர்களைப் போன்று கூட்டு முயற்சியினால்தான் தமிழ்ச்சமூகம் தடைகளை உடைத்து உரிமைகளையும் வெற்றிகளையும் அடைய முடியும்.

இந்தக்கதையில்  உள்ள பல உத்திகளை நமது “தமிழ்வழிக்க கல்வித் திட்டத்திலும் பயன்படுத்தலாம். உதாரணமாக மாணவர்களை நன்றாக  வழிநடத்த அவர்கள்  விரும்பும் பாடங்களில் சிறந்து விளங்குபவர்களுடன் இணைத்து விடலாம். சிறந்த மாலை நேர தமிழ்வழி வகுப்புக்கள் நடத்தலாம். இது பலரை தமிழ்வழிக் கல்வித்திட்டத்தில் ஈர்க்கும். மேலும் மிகச்சிறந்த மாணவர்கள் பிரான்கல் போல வெற்றியடைய வழி நடத்துவதற்கான முறைகளை செயல்படுத்த முனையவேண்டும்.

உசாத்துணை:

Frenkel, Edward. Love and math: The heart of hidden reality. Hachette UK, 2013.

This entry was posted in அறிவியல், கணிதம், கல்வி, சமூகம், தமிழ், தமிழ்வழிக் கல்வி, Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s