சமூக இயக்கத்தை புரிந்து கொள்ளுதல்

 1. ஒரு உயிர் வாழ்வதற்கு காரணம் அது தன்னைப் பற்றியும் தன் சுற்றுச்சூழல் பற்றிய அறிவையும் கொண்டிருப்பது மட்டும்தான்.  தாவரங்கள், விலங்குகள் அறிவை உணர்வதில்லை, ஆனால் இந்த அறிவு அதன் மரபணுக்களில் இருந்து அவற்றை இயக்குகிறது. நாம் அறிவை உணர்கிறோம் கற்கிறோம், அதுதான் வித்தியாசம்.   ஒரு இனம் வாழ்கிறதா அல்லது அழிகிறதா  என்பது அவ்வினம் பெற்றுள்ள அறிவைப்  பொறுத்தே அமைகிறது. இதுதான் அடுத்து கீழ் வரும் அனைத்து கருத்துக்களுக்கும்  அடிப்படை. [1]
 2. கீழிருந்து மேலாக கட்டியமைக்கப்பட்ட சமூகம் நொறுங்காது. மேலிருந்து ஒரு பலமான தலைமையினால் கட்டப்பட்டது நொறுங்கும். இதுதான் பலம் குறைந்த யூதர்கள் இன்றும் வாழ்வதற்கு ஒரு காரணம்,  பலம் வாய்ந்த பண்டைய ரோமர்கள், எகிப்தியர்கள் காணாமல் போனதற்கும் காரணம்.[2,3]
 3. பகுத்தறிவு உணர்வுகளுக்கு பெரும்பாலும் அடிமை. நமது உணர்வுகள் எந்த குறிக்கோளை அடைய தூண்டுகிறதோ, அதற்கு பகுத்தறிவு துணைபுரியும். பகுத்தறிவின் மூலம் உணர்வுகளை மாற்றுவது முடியாது அல்லது மிக கடினமானது. நம்மை பெரும்பாலும் இயக்குவது நமது உணர்வுகள், பகுத்தறிவு அல்ல.[4]
 4. மனிதனின் சமூக அடையாளம் (social identity) மரபணுக்கள் மூலம் வருவது அல்ல, பண்பாட்டிலிருந்து கற்றல் மூலம் இளவயதில் தானாக மொழியைப் போல உள்வாங்கப்படுகிறது. சமூக அடையாளம் உணர்வுகளுடன் பிணைந்துள்ளது, அதை பகுத்தறிவு கொண்டு மாற்ற முடியாது. யூதர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்கள் அடையாளத்தை இழக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம், அவர்கள் தங்கள் சந்ததியினரிடம் பண்பாட்டு அமைப்புகள் மூலம் அடையாளத்தை உணர்வுப்பூர்வமாக பிணைப்பதுதான், அவர்களின் பகுத்தறிவினால் அல்ல.[5,6,7]
 5. ஒரு மொழி அழியாமல் வாழ்வதற்கு அதன் தகுதி மட்டுமே முக்கியம். அந்த தகுதி அடையாளம் மூலம் வரலாம் அல்லது பயன் மூலம் வரலாம். யூதர்கள் தங்கள் மொழியை அடையாளமாக கருதியதால், அந்த மொழியை மீட்க முடிந்தது. வடமொழியும் மீண்டும் மீட்கப்படலாம். பயனை மட்டுமே நம்பிய மொழிகள், பயன் குன்றிய பின் அழிந்து போகும். [8, 9]
 6. பலம் வாய்ந்தவை பலமற்றவயை அழிக்கும் என்பது உண்மையல்ல. அது இடார்வினின் கோட்பாடும் அல்ல. எது தன்னை தனது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்கிறதோ அவை வாழ்கின்றன. பலம் குறைந்த யூதர்கள் எவ்வாறு பிழைத்தார்கள்? [10]
 7. உத்திகள் (strategies) என்பது வகைகளை (variety) அடிப்படையாக கொண்டது. ஒரு உயிர் 10 வகையான ஆபத்துக்களை  எதிர்கொண்டால் , அவ்வுயிர்  குறைந்தது 10 முறையில் எதிர்கொள்ளவேண்டும். உத்திகளின் எண்ணிக்கையில் நாம் சமமாக அல்லது கூடுதலாக எதிர் கொள்ளாவிட்டால், நாம் அழிவோம். இது ஒரு அடிப்படை விதி (Law of Requisite Variety). இதனால்தான் கொரில்லா படைகள் பலம் வாய்ந்த மரபுவழி படைகளை வெல்கிறது. எதிரியை தோற்கடிப்பதற்கு  நாம் எவ்வளவு வித்தியாசமான வகைகளில் உத்திகளை பயன்படுத்துகிறோம் என்பது ஒரு முக்கியமான  காரணி. [11]
 8. நம்மை அழிப்பது தினமும் வரும் தலைப்புச் செய்திகள் அல்ல. நம்மை அழிப்பது தினந்தோறும் பல வருடங்களாக நடப்பது, செயதித்தாள்களில் வராதது. நாம் இரைச்சலுக்கும் (noise) தகவலுக்குமான (signal) வேறுபாட்டை உணர்ந்து செயல்படவேண்டும் [12]. ஒரு மொழியோ இனமோ ஒரு நாளில் சாவதில்லை, அது பல தசாப்தங்களாக மெதுவாக புலப்படாமல் நடப்பது. இக்கருத்தை பரணி கிருஷ்ணரஜனி அவர்களும் தனது பல கட்டுரைகளில் தெரிவித்துள்ளார்கள்.
 9. நல்ல எண்ணத்தில் நடக்கும் செயல்பாடுகள் எல்லாம் நல்ல முடிவை தரும் என்று நினைப்பது தவறானது. நமது செயல்பாடுகள் வெற்றிபெற நமக்குத்தேவையானது அதற்கான அறிவு. அந்த அறிவை ஒரு தனி மனிதனால் சமூகம் போன்ற சிக்கலான அமைப்புகளுக்கு உருவாக்க முடியாது. பல்வேறு துறைகளில் பல்வேறு அறிவுகள் கொண்ட நிபுணர்களால் கலந்து ஆலோசிக்கப்பட்டு செயல்படுத்தப் படவேண்டியது [13]. அவ்வாறு செய்தாலும் முழு அறிவைப்பெற முடியாது.
 10. முழுமையான அறிவு இல்லாத பொழுது, முழுமையான திட்டமிடல் சாத்தியமில்லை. அதனால் முழு  திட்டமிடல் என்பது  தோல்வியைத்தரும். அதுபோன்ற நிலையில், நம்மிடம் உள்ள அறிவைக்கொண்டு பல சோதனைகள் செய்து எது சரியானது என கண்டறியவேண்டும். யூதர்கள் தங்களை காத்துக்கொண்டது முழுமையான  திட்டமிடல் மூலம் அல்ல. பல்வேறு முயற்சிகளில், சோதனைகளில் இறங்கியதால்தான்.  இதை பரிணாமத் திட்டமிடல் என்று கூறலாம். நம்மிடம் உள்ள அறிவைக்கொண்டு சோதனைகள் மூலம் திட்டம் தானாக களத்தில் பரிணமிக்கும். அதற்கான சாதகமான சூழல்களை அமைக்கவேண்டும் [14].
 11. ஒரு சமூகத்தின் வரலாறு அந்த சமூகத்தை தக்கவைப்பதற்கான அடிப்படையான அடையாளத்தை கொடுக்கிறது. தமிழ் மொழியை பேசுவதனால் ஒருவர் தமிழர் என்று உணர்வதில்லை. அவர்கள் எந்த வரலாற்றின் மீது பிடிப்பு ஏற்படுகிறதோ, அந்த வரலாற்று இன மக்களாக உணர்வர். சமூக அடையாளம் இளவயதில் தோன்றுவதால், அந்த வயதில் வரலாற்றை கற்பிப்பது அவசியமாகிறது. இங்கு வரலாறு என்பது பண்பாட்டையும் உள்ளடக்கியது. யூதர்கள் இதை அவர்களின் மதம் மூலமாக செய்கின்றனர்.  வரலாறு அடையாளத்தை மட்டுமில்லாமல் இனத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது.  வரலாறு இல்லாத நாடு என்பது ஒரு முரண் [15]. எப்படி மரபணுக்கள் (DNA) நமக்கு தனிமனித அடையாளத்தை கொடுக்கிறதோ, அதுபோல வரலாறு மனிதனின் சமூக அடையாளத்தை கொடுக்கிறது.[5,6,7,15]
 12. நமது எதிர்காலம் நமது இறந்த காலத்தில் உள்ளது. ஒவ்வொரு அரசியல் செயல்பாடும் அவ்வினத்தின் வரலாற்று தொடர்ச்சியை ஆதாரமாக வைத்தே திட்டமிடவேண்டும். வரலாற்றை உதறிவிட்டு புதிய வரலாற்றை படைப்போம் என்றால் மக்களின் ஆதரவு இருக்காது. தமிழரின் பண்டைய வரலாற்றில் சாதிகள் இல்லையென்பதால், அவ்வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்கு கற்பித்து தமிழரால் சாதியில்லாத எதிர்காலத்தை உருவாக்க முடியும். ஆனால் இந்துத்வாவினால் சாதியை ஒருபோதும் உதற முடியாது. அவர்களின் வரலாற்றை/அடையாளத்தை  அவர்களே மறுப்பது முடியாத காரியம். வரலாறு எதிர்காலத்தை தீர்மானிப்பதால், அனைத்து  தேசியங்களும் புனைவு வரலாற்றை எழுதுவது இயல்பு.[15]
 13. ஒரு பக்கம் திறந்த ஆனால் மூன்று பக்கம் கண்ணாடி சுவர்களால் கட்டப்பட்ட ஒரு அறையில் ஒரு கோழியை விட்டு, அதற்கான உணவை கண்ணாடிப் பக்கம் உள்ள சுவற்றுக்கு வெளியே வைத்தால், அந்த கோழி கண்ணாடி சுவற்றை முட்டிக்கொண்டு நிற்கும். அதனால் சுற்றிச்சென்று உணவை அடையும் அறிவுத்திறன் இல்லை. நாம் இந்த மூன்று அச்சு சிக்கலை (3-D) எளிதாக தீர்த்து விடுவோம். ஆனால் சமூக சிக்கல்கள் பல-அச்சுக்களை (Multi-dimensional) கொண்டது. அதில் எளிதான பாதை என்ன என்பதை நமது மூளையால் சிந்திக்க முடியாது [16]. அதனால் நமது கண்ணுக்கு புலப்டுகிற சில தீர்வுகளை எடுத்துக் கொண்டு ஒரு கோழி போல முட்டிக்கொண்டு நிற்போம். நமது சிக்கல்களுக்கு எளிதாக சுற்றிச்சென்று அடையும் தீர்வுகள் உள்ளன. அதற்கு ஆழமான கற்றலும் புரிதலும் வேண்டும்.  ஆட்டக்கோட்பாடுகள் (game theory) மூலம் சிந்திக்கேவண்டும், மற்ற இன வரலாறுகளை கற்கவேண்டும், பல்வேறு அறிவியல் தத்துவங்களை கற்றல் வேண்டும், பல சோதனைகளை செய்து பார்க்கவேண்டும்., பல்துறை வல்லுனர்களுடன் சேர்ந்து ஆராயவேண்டும்.

தண்ணீர் மலையுச்சியிலிருந்து எப்படி கடலை ஒரு முழு திட்டமில்லாமல் வெற்றிகரமாக எளிதான பாதையைக் கொண்டு அடைகிறதோ, அதுபோலத்தான் ஒரு சமூகமும் தனது குறிக்கோளை அடையவேண்டும் [14]. அதுதான் எளிதானது, அறிவானது.  எளிதான பாதை என்பது பரிணாம தத்துவத்தின் அடிப்படை . இந்தப்பாதையின் வழியாகத்தான்  அனைத்து உயிர்களும் பரிணமித்தன , இன்றும் செயல்படுகின்றன. சமூகம் என்பது விதிவிலக்கல்ல. இக்கருத்தை பரணி கிருஷ்ணரஜனி அவர்கள் தண்ணீர் கோட்பாடு என்று தனது கட்டுரைகளில் கூறுகிறார்.

 1. ஒரு சமூகம் தனது வளர்ச்சியின் பொழுது தோன்றும் சிக்கல்களை காலகாலமாக தனக்குத் தெரிந்த முறைகளைக் கொண்டு சாதாரணமாக தீர்த்துவிடமுடியும். ஆனால் சமூகம் பெரிதாக வளர்ந்து பெரிய சிக்கல்கள் உருவாகும்பொழுது,  அச்சிக்கல்களை தீர்க்கும் அறிவாற்றல் இல்லாவிட்டால் அச்சமூகத்தின் அழிவு ஆரம்பமாகிறது. ஒரு சமூகத்திற்கு ஒரு குறிப்பிட்ட அறிவுத்திறன் எல்லை (cognitive threshold) உண்டு. ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான அறிவு, அச்சமூகத்தின் அறிவுத்திறன் எல்லையை தாண்டும்பொழுது, அச்சிக்கலை சமூகத்தால் தீர்க்கமுடிவதில்லை. ஒரு சமூகம் இந்நிலையில் உள்ளதா என்பதற்கு இரண்டு அறிகுறிகள் உள்ளன. 1) அறிவு முடக்கம் ஏற்படும். புதிய சிந்தனைகள் இல்லாமல், மீண்டும் மீண்டும் விடாப்பிடியாக சில மாறுதல்களுடன் அதே வழிமுறைகளை பின்பற்றுவார்கள். 2. நிலைமை மோசமானபின் நம்பிக்கைகள் முன் நிறுத்தப்படும். தாம்  கடினமாக அர்ப்பணிப்புடன் குறிக்கோள்களை நோக்கி உழைத்தால் சிக்கல்களைத் தீர்த்துவிடலாம் என்ற நம்புவர், ஆனால் நிலவரம் அதுபோன்ற முயற்சிகள் தோல்வியடைவதையே காட்டும். இவ்விரண்டு குறிகளும் தோன்றியபின்,  அச்சமூகம் அழிவிற்குத் தயாராகிறது.[17]

என்னுடைய பார்வையில் தமிழ்ச்சமூகத்தில்  இந்த  அறிகுறிகள் ஓரளவு தென்படுகின்றன. நாம் நமது கூட்டு அறிவுத்திறனை  பயன்படுத்துவது இன்றைய தேவையாக இருக்கிறது. நாம் எதிர்  நோக்கும் சிக்கல்கள் அடிப்படையில் அறிவுச்சிக்கல்கள் என்று பார்க்க வேண்டும் . இதை கூட்டு அறிவு முயற்சியினால்தான் முறியடிக்க முடியும்.

 1. Plotkin, Henry C. Darwin machines and the nature of knowledge (pp. xv, 240, 244). Harvard University Press, 1997.
 2. Taleb, Nassim Nicholas. Antifragile: Things that gain from disorder. Vol. 3. Random House Incorporated, 2012.
 3. Brafman, Ori, and Rod A. Beckstrom. The starfish and the spider: The unstoppable power of leaderless organizations. Penguin, 2006.
 4. Haidt, Jonathan. The righteous mind. Vintage, 2012.
 5. Wade, Nicholas. The faith instinct: How religion evolved and why it endures. Penguin, 2009.
 6. McLean, Kate C., and Moin U. Syed, eds. The Oxford handbook of identity development. Oxford Library of Psychology, 2014.
 7. Herriot, Peter. Religious fundamentalism and social identity. Routledge, 2014.
 8. Crystal, David. Language death. Ernst Klett Sprachen, 2000.
 9. Abrams, Daniel M., and Steven H. Strogatz. “Linguistics: Modelling the dynamics of language death.” Nature6951 (2003): 900-900.
 10. Dennet, Daniel Clement. Darwin’s Dangerous Idea: Evolution and the meanings of life. Simon & Schuster, 1995.
 11. Ashby, W. Ross. An introduction to cybernetics. Chapman & Hall Ltd, 1961.
 12. Silver, Nate. The signal and the noise: why so many predictions fail–but some don’t. Penguin, 2012.
 13. Page, Scott E. The difference: How the power of diversity creates better groups, firms, schools, and societies. Princeton University Press, 2008.
 14. Bar-Yam, Yaneer. Making things work: solving complex problems in a complex world. Knowledge Industry, 2004.
 15. Smith, Anthony, and Anthony D. Smith. Nationalism and modernism. Routledge, 2013.
 16. Newman, James R. The world of mathematics. Vol. 4. Рипол Классик, 1956.

Costa, Rebecca. The watchman’s rattle: thinking our way out of extin

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s