அறிவின் தன்மைகள்

1. புதிய முக்கிய கருத்துக்கள் பெரும்பாலும் நமது பழைய கருத்துக்களை தவறாக்கும். அறிவு என்பது கூட்டிக்கொண்டே செல்வதல்ல, பழையவற்றை கழிப்பதும் ஆகும். நமது கருத்துக்கள் தவறாக இருக்கலாம் என்ற எண்ணமில்லாமல், புதிய உண்மைகளை கற்க முடியாது, படைக்க முடியாது. [1,7]

2. புதிய அறிவு என்பது பொது வாக்கெடுப்பு மூலம் வருவதல்ல. ஒருவரால் அல்லது மிகச்சிறிய குழுவால் உருவாக்கப்பட்டு மற்ற அனைவரின் கருத்துக்களும் தவறு என்று உருவாகிறது, [1]

3. நமது கருத்துக்கள் நாம் காண்பவற்றை எல்லாம் விளக்கி விட்டால், நமது கருத்துக்கள் எல்லாம் சரி என்பதல்ல. அதை வேறுவிதத்திலும் சிறப்பாக விளக்க முடியும். பூமியைச் சுற்றித்தான் சூரியனும் கோள்களும் உலாவருகின்றன என்பதிலிருந்து சூரியனைச் சுற்றிதான் பூமியும் கோள்களும் உலாவருகின்றன என்ற கருத்து இப்படித்தான் தோன்றியது. இவ்வாறுதான் அறிவியல் முன்னேறுகிறது.[1]

4. நாம் காணும் ஒரு நிகழ்வை, காண்பதை வைத்து விளக்க முயல்வோம். ஆனால் ஆழமான புரிதலுக்கு நம்மால் காணமுடியாதற்றைக் கொண்டு விளக்க முயலவேண்டும். பின்பு அந்த காண முயாதவற்றை இன்னொரு காண முடியாதவற்றைக் கொண்டு விளக்கவேண்டும். இவ்வாறுதான் அறிவியல் முன்னேறுகிறது. நாம் காண்பதை காண்பவற்றைக் கொண்டு விளக்கிக் கொண்டிருந்தால், இன்னும் பூமி தட்டை என்பதிலிருந்து முன்னேற முடியாது.[3]

5. முக்கியமான அறிவுசார் படைப்புகள் நாம் தினந்தோறும் காண்பவற்றைக்கொண்டு நிகழ்வதல்ல. நாம் தினந் தோறும் காண்பவற்றுக்கு நேர்மாறாக நிகழும் அரிய நிகழ்வுகளை ஆராயும் பொழுது உருவாகிறது.[1]

6. புதிய அறிவை ஏரணத்தைக் கொண்டு மட்டும் அறிய முடியாது. நிறைய அறிவு சார் நூல்களையும் தகவல்களையும் கற்கவேண்டும். அதன்பின் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும், பெரும்பாலும் அவை தோல்வியில் முடியும். முடிவில் உண்மை நாம் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தானாகத் தோன்றும். அவ்வாறு தோன்றியபின் ஏரணத்தைக் கொண்டு உண்மையா என்று சரி பார்க்கலாம்.[2]

7. ஒரு ஐன்ஸ்டீன் ஆவதற்கு அதிக IQ தேவையில்லை, 120 க்கு மேலிருந்தால் போதுமானது. நிறைய கருத்துக்களை கற்கவேண்டும், அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து புரிந்து கொள்ளல் வேண்டும். பின்பு நிறைய படைப்புகளை உருவாக்க முயல வேண்டும். அவற்றில் ஒன்றிரண்டு அதிக பயனுள்ளதாக அமையும்.[2]

8. அறிவு என்பது அழகானது என்கின்றார் பிலேட்டோ (Plato). நாம் ஒரு கருத்தை புதிதாக கண்டுபிடிக்கறோம் என்றால், அது உண்மையா என்று கண்டறிவதற்கு ஒரு அடிப்படைத் தேவையாக அறிவியலாளர்கள் காண்பது அதன் அழகு, நாம் ஒரு ஒழுங்கான பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். நாம் அவற்றைப் பற்றிய கண்டுபிடிப்புகள் அழகாக சுருக்கமாகத்தான் இருக்கும் என்பது அறிவியலாளர்களின் பார்வை. இது அறிவியல் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை உண்மையாக நிற்கிறது [5]

9. ஒரு அறிவியல் கருத்து தனித்து நிற்பததல்ல, அது மற்ற அறிவியல் கருத்துக்களுடன் தொடர்புடையது. ஒரு கருத்து உண்மையா என கண்டறிவதற்கு, அது எவ்வாறு மற்ற கருத்துக்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதைக் கொண்டு கண்டறியலாம். இவ்வுலகில் உள்ள அனைத்து அறிவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்ட ஒரு வலைப்பின்னல். [6]

10. தத்துவமேதை ஸ்பினோசா (Spinoza) இன்பத்தை பற்றி ஆழ்ந்து சிந்தித்து கண்டறிந்தது என்னவென்றால், இவ்வுலகில் நீங்காத அதியுச்ச இன்பமளிப்பது உண்மையைத் தேடி அறிதல் என்கிறார் [4]. உலகில் சிறந்த அறிவியலார்கள் பல சாதனைகளைப் படைத்ததற்குக் காரணம், அவர்கள் தங்களை வருத்திக் கொண்டதனால் அல்ல. அவர்கள் அதில் அதியுச்ச இன்பம் கண்டதனால்தான்.

இது அறிவியல் ஆராய்ச்சி செய்ப்பவர்களுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. அனைத்து அறிவுசார் படைப்புகளை உருவாக்குபவர்களுக்கும் , அரசியல் சமூக சிக்கல்கள் உட்பட, பொருந்தும். ஏனெனில் நாம் ஒரு ஒழுங்கான, அனைத்து அறிவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட அழகான பிரபஞ்சத்தில் வாழ்கிறோம்.

உசாத்துணை
1. Kuhn, Thomas S. The structure of scientific revolutions. University of Chicago press, 2012.
2. Simonton, Dean Keith. Creativity in science: Chance, logic, genius, and zeitgeist. Cambridge University Press, 2004.
3. Deutsch, David. The beginning of infinity: Explanations that transform the world. Penguin UK, 2011.
4. Goldstein, Rebecca. Betraying Spinoza: the renegade Jew who gave us modernity. Schocken, 2009.
5. Goldstein, Rebecca. Plato at the googleplex: Why philosophy won’t go away. Vintage, 2015.
6. Wilson, Edward O. Consilience: The unity of knowledge. Vol. 31. Vintage, 1999.
7. Popper, Karl. All life is problem solving. Routledge, 2013.

This entry was posted in அறிவியல், அறிவு, பகுத்தறிவு, Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s